டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக வை சேர்ந்த  திரிவேந்திர சிங் ராவத் பதவிற்று  9 மாதங்கள் ஆகிறது. இந்த 9 மாதத்தில் மட்டும் பட்கோடா மற்றும் டீக்கு ரூ 68.5 லட்சம் செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி உத்தரகாண்ட் முதல்வராக பதவி ஏற்றார். திரிவேந்திசிங் ராவத் பதவி ஏற்ற பின் சிற்றுண்டிக்கு எவ்வளவு தொகை செலவு செய்து இருக்கிறார் என்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஹேமந்த் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதில் மாநில அரசின் நிதியில் இருந்து ரூ, 68,59,865 யை திரிவேந்திரசிங்  டீ, பிஸ்கட், பக்கோடா போன்ற நொறுக்கு தீணிக்கு மட்டும் அதாவது , புத்துணர்ச்சி நடவடிக்கைகளுக்காக செலவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது உத்தரகாண்ட் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-

Leave A Reply

%d bloggers like this: