நால்கொண்டா, பிப். 6-

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மக்கள் மத்தியில் மதவெறி உணர்வைக் கிளறி,  மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைலிருந்து அவர்களைத் திசைதிருப்பும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலங்கானாமாநில இரண்டாவது மாநாடு தெலங்கானா மாநிலம், நால்கொண்டாவில்  ஞாயிறு அன்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் முதல்நாள் அமர்வினைத் துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

மத்திய அரசின் பட்ஜெட் முழுமையாக போலிவாக்குறுதிகளையே உள்ளடக்கி இருக்கிறது. சாமானிய மக்கள்மீது வரிகளுக்கும் மேல்வரிகளைப் போட்டிருக்கின்ற அதே சமயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கியிருக்கிறது. மோடி, தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களுக்கு அளித்திட்ட எந்தவொரு உறுதிமொழியையும் நிறைவேற்ற முன்வரவில்லை. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்திட பணம் இல்லை என்று கூறும் மோடி அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களில் 2லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தள்ளுபடி செய்திருக்கிறார். இவ்வாறு மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளின் அரசாங்கமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அதனை மறைப்பதற்காக மக்கள் மத்தியில் மதவெறித்தீயைக் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். மாநாடு எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: