திருப்பூரின் உயிர்நாடியாக இருக்கும் பனியன் தொழில் நெருக்கடியைச்சந்திக்கும் போது அதன் தாக்கம் எல்லா வகையிலும் பிரதிபலிக்கிறது. மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்கள் முதல் தள்ளுவண்டி பழம், காய்கறி வியாபாரிகள் வரை பல விதத்திலும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். குறிப்பாக வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூரில் வேலைக்கு வரக்கூடியவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இளைஞர்கள். அவர்களுக்கு இங்கு வீதிகள் தோறும் இருக்கும் மெஸ், தள்ளு வண்டி கடைகள்தான் உணவளித்து வருகின்றன. இப்போது இதுபோன்ற வீட்டுச் சமையல் உணவகங்களும் சரிவைச் சந்தித்து வருவது சோகமான உண்மை.

இது பற்றி திருப்பூர் வேலம்பாளையம் சாலையில் மெஸ் வைத்திருக்கும் எஸ்.ரெங்கராஜன் கூறியதாவது: திருப்பூரில் உள்ள அனைத்து வியாபாரங்களும் தொழிலை சார்ந்தே இருக்கின்றனர், கடந்த 2014 ஆம் ஆண்டில் அம்மா உணவகம் துவங்கிய பொழுது உணவகங்கள் கடும் சரிவை சந்தித்தனர். அப்போது நிலைமை சரியாவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு செல்லாப்பணம் திட்டம் கொண்டு வந்த பிறகு கடுமையான தொழில் பாதிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து ஜி எஸ் டி வந்து அனைத்து வகையான தொழில்களையும் முடித்து விட்டார்கள். எங்கள் கடைக்கு அருகில் பனியன் நிறு
வனம், டையிங் நிறுவனம் போன்றவற்றில் வெளி மாவட்டங்களில் இருந்து வேலை செய்வர்களுக்கு மாத வாடகை மற்றும் வாரவாடகை முறையில் உணவு சாப்பிட்டு வந்தனர்.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு பிறகு அனைவரும் வேலையை விட்டு வேறு தொழில்களுக்குச் சென்று விட்டார்கள். சிலர் தங்கள் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் வடமாநில தொழிலாளர்கள் ஓரிருவராக இருக்கும் போது கடைக்கு வந்து சப்பிட்டுகொண்டிருந்தார்கள். இப்பொழுதெல்லாம் அவர்களே அறைகளில் சப்பாத்தி சுட்டு சாப்பிடுவதால் எங்கள் வியாபாரம் போய்விட்டது.அது மட்டுமல்லாமல் விலைவாசி அதிகமானதால் எந்த பொருளையும் நம்பி வாங்கி வியாபாரம் செய்ய பயமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மெஸ் வைத்து நடத்தி வருகிறேன், முன்பெல்லாம் ரூ.1000 க்கு பொருள் போட்டு வியாபாரம் செய்தால் சுமார் ரூ.500 வரை லாபம் கிடைக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் ரூ.300 லாபம் வருவதே மிகப்பெரிய கஷ்ட
மாக உள்ளது. நடு கடல்ல துடுப்பு இல்லாத படகு மாதிரி மாட்டிகிட்டு தவிக்கிறோம். இதை அரசு சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொழிலை விட்டு வேறு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.