திருப்பூர் காதர்பேட்டை மார்க்கெட் என்பது இந்தியா முழுவதும் பிரபலமானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இங்கு கொள்முதல் செய்து சாலையோர விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். ஏறத்தாழ 2000 வர்த்தகர்கள் இருக்கின்றனர். மொத்தம் ஆண்டுக்கு ரூ.2000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். ஆனால் பணமதிப்பு நீக்கத்தால் பணப்புழக்கம் முடங்கி கடும் பாதிப்பைச் சந்தித்தது காதர்பேட்டை.

இந்த 14 மாத காலத்தில் ஏறத்தாழ 75 சதவிகித வர்த்தகம் முடங்கிப் போனது. ஓராண்டு காலத்தில் ரூ.500 கோடிக்குத்தான் வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. முன்பெல்லாம் காதர்பேட்டையில் கடை கிடைப்பதே கடினம். எப்போதும் டிமாண்ட்
இருக்கும். ஆனால் தற்போது 10 சதவிகிதத்துக்கு மேற்பட்ட கடைகள் காலியாக உள்ளன. இங்கிருப்போர் அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றக்கூடியவர்கள் என்று சொல்வது சரியல்ல. சில பெரிய வர்த்தகர்கள் காதர்பேட்டை மார்க்கெட் பெயரைப் பயன்படுத்தி இங்கிருந்து ஆடைகளை பல பகுதிகளில் கொண்டு சென்று இருப்பு வைத்து பில் இல்லாமல் விற்பதால் இப்படி சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் முறையாக ஜிஎஸ்டி எண் எடுத்து வரி கட்டுவதற்கு தயாராகவே உள்ளனர். எனினும் இதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இங்கிருப்போர் ஏற்றுமதி உபரி துணிகளை வாங்கினால் அதற்கு பில் தருவதில்லை. ஆனால் நாங்கள் வரி கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே வரியைக் குறைக்க வேண்டும் என்று காதர்பேட்டை வியாபாரிகள் கூறுகின்றனர்.

காதர்பேட்டை சந்தை என்பது இந்தியாவின் சாலையோர வியாபாரத்தின் வர்த்தக மையமாகத் திகழ்கிறது. மொத்தஇந்தியாவின் சாலையோர வியாபார பாதிப்பின் ஒரு குறியீடாகவும் காதர்பேட்டை சந்தை இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.