திருப்பெரும்புதூர்,
இருளர் சமூகத்த சேர்ந்த இளம் பெண்ணிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டநபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருபெரும்புதூரை பூர்வீகமாக கொண்ட குமார்,மீனா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் பிழைப்பிற்காக திருவள்ளுர் அருகில் உள்ள மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பேட்டில் தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.ஞாயிறன்று (பிப்.4) அன்று தனது உறவினர் வீட்டிற்கு கணவன், மனைவி இருவரும் மாலை சுமார் 3 மணியளவில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது வேம்பேடு கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுபான கடையை கடந்து சென்ற போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 5 வாலிபர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்த இளம் பெண் மீனாவை (வயது 24) கேலி செய்துள்ளனர். இதைக் கண்ட அவரது கணவர் குமார் அந்த இடத்தை கடக்க முயன்றபோது இருவரையும் விரட்டிச் சென்ற அந்த கும்பல் இளம் பெண்ணை சுற்றி வளைத்து பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டது.

அப்பெண்ணின் சுடிதார் மற்றும் உள்ளாடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் படுகாயத்துடன் மீனா திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனையும், உதவிக்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த முரளி என்பவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.பொது மக்கள் பிடித்து வைத்திருந்த மதன்குமார்(28), விஜயகுமார் (26), ருத்ரமூர்த்தி (21),ஏழுமலை (23)ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாதர் சங்கம் கண்டனம்.
இருளர் சமூகத்தை சேர்ந்த மேகலா மற்றும் அவரின் கணவர் பகல் நேரத்தில் வேலைக்கு செல்லும் போது கணவன் எதிரிலேயே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளாடைகள் வரை பிரித்துள்ளனர். உடலில் பல்வேறு பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.ஆனால் காவல்துறை அடித்தடி என சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளது.திருவள்ளுர் அரசு மருத்துவமனையும் அடி தடி என பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இதை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்ய வேண்டும் என ஜனநாய மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் என்.கீதா, பெர்னா, விஜயா, இ.மோகனா ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: