சேலம்,பிப். 5-
கணவரின் வீட்டாரால் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டதாக கூறி பெண் ஒருவர் சேலம் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்று வந்தபோது, சேலம் மாநகரம் குகை பகுதியியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவியான ஜீலி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து அழுது புலம்பினார். இதுதொடர்பாக அவரிடம் ஆட்சியர் விசாரிக்கையில், தான் குகை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவர் சங்கர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தான் தலித் பெண் என்பதால் வீட்டில் இருக்க கூடாது என அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டனர். ஆகவே, இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து மாவட்ட காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமியை வரவைத்த ஆட்சியர், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: