பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து இந்தியாவில் விற்கப்படும் 64% ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகள் அங்கீகாரம் பெறாதவை என லண்டன் குயின்மேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகாஸ்டல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகளுக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அங்கீகாரம் அளிக்கவில்லை.

2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 118 வகையான ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகளில் 64% மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் அங்கீகாரம் பெறாதவை. 12 பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட 500 மருந்து உற்பத்தியாளர்கள் சுமார் 3,300 பிராண்ட்களின் பெயர்களின் இந்த ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகளை விற்பனை செய்கின்றனர்.

உயரும் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (AMR) உலக சுகாதாரத்திற்கு நெருக்கடி ஆகும். சர்வதேச அளவில் எதிர்ப்பு விகிதங்களிலும், ஆன்ட்டி பயோடிக் உட்கொள்வதும் இந்தியாவில் அதிகளவில் உள்ளது.
இங்கிலாது மற்றும் அமெரிக்காவில் 4% ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகளின் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்தியாவில் தான் அதிகமானோர் ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் அமெரிக்கா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகள் உட்கொள்வது 76% அதிகரித்துள்ளது என தி லேன்செட் என்ற மருத்துவ இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கோழிகளுக்கும் ஆன்ட்டி பயோடிக் மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. கோழிகளை நோய்களின் இருந்து காப்பதற்கான கடைசி நம்பிக்கையாக கொலிஸ்டின் என்ற ஆன்ட்டி பயோடிக் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதாக புலன் விசாரணை ஜெர்னலிசம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐநா.வின் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஆலோசகர் பேராசிரியர் டிமோதி வால்ஷ் கூறுகையில், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தான் இந்த மருந்து கொடுக்கப்படும். ஆனால் இந்தியாவில் இது கோழிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Leave A Reply