கோவை, பிப். 5-
இழிவுவாகவும், ஒருமையிலும் பேசிவரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கைது செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இந்து மக்கள் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் அவ்வமைப்பின் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்று பேசுகையில், ஆதிதமிழர் பேரவையின் தலைவர் அதியமான், திருவள்ளுவன் ஆகியோரை மிகவும் கொச்சையாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவையினர் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் மனு அளித்தனார்.

Leave A Reply

%d bloggers like this: