நாகை மாவட்டத்தில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து வழிபாடு செய்த புகைப்படம் சர்ச்சையானதை தொடர்ந்து இரு அர்ச்சகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பொதுவாக இந்து கோவில்களில் பெண் சிலைகளிக்கு பட்டுபுடவை அணிந்து வழிபடுவதுதான் வழக்கம். இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை கோவில் உள்ளது. அங்குள்ள அம்பிகை அம்மனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தை வெள்ளி தினத்தனத்தையொட்டி, அம்மனுக்கு ராஜ் என்ற அர்ச்சகர் பூஜை செய்தார். மாலையில் நடந்த சந்தன அலங்காரத்தின் போது, அம்மனுக்கு சுடிதார் போன்ற உடை அணிந்து வழிபாடு செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் சர்சையை கிளம்பியுள்ளது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்த நிலையில் அர்ச்சகர்கள் ராஜ், கல்யாணம் ஆகிய இருவரை திருவாவடுதுறை ஆதீனம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.