சேலம், பிப்.5-
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரக்கோரி பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம் தம்மநாய்கன்பட்டியில் ஆதிதிராவிடர் மேல் காலனியில் குடநீர் தண்ணீர் தொட்டி பழுதடைந்து கீழ் விழும்நிலையில் உள்ளது. ஆகவே, விபத்து ஏற்படும் முன் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி புதிய குடிநீர் தொட்டி அமைத்துதர வேண்டும். கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும். 3 ஆவது வார்டு பகுதியில் சாலை வசதிஅமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திங்களன்று பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆர்.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு எண்ணற்றோர் பங்கேற்றனர். முடிவில் எம்.புஷ்பராஜ் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: