கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஓடும் ரயிலில் இருந்து திருநங்கை தள்ளிவிட்டத்தில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு பயந்து திருநங்கை ஸ்வேதா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சத்யநாராயணா(32), வீரபாபு(20), பாப்பண்ணா துரா(19), சாமிதுரா(23) ஆகியோர் ராஜமுந்திரியில் இருந்து, திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தனர். சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி நிலையத்துக்கு வந்த ரயில், சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது, சத்யநாராயணாவும், வீரபாபுவும்,  முன்பதிவு செய்யாத பெட்டியின் படியில் அமர்ந்து கொண்டிருந்த போது அங்கு வந்த திருநங்கைகள் சிலர் அவர்களிடம் பிச்சை கேட்டு வந்தனர். அப்போது சத்யநாராயணா பணம் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு திருநங்கை, அவரை காலால் எட்டி உதைத்தார். இதில் நிலைகுலைந்த சத்யநாராயணா, ரயிலில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த வீரபாபு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காவலர்கள் விசாரணைக்கு பயந்து திருநங்கை ஸ்வேதா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.