கோவை, பிப். 4-
மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை, வடகோவை சிந்தாமணி அருகே ராமசாமி சாலை சந்திப்பில் தலையில் பலத்த காயத்துடன் அடையாளம் தெரியாத நபர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், காயமடைந்த நபர் மற்றொருவருடன் அப்பகுதி சாலையோரத்தில் தங்கி கூலி வேலைக்குச் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருடன் தங்கி இருந்த வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த செந்தில் (35) என்பவரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, உடன் தங்கியிருந்த நபர் குறித்து செந்திலுக்கு அடையாளம் தெரியவில்லை. மேலும் வெள்ளிக்கிழமை இரவு அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு செந்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த செந்தில் அவரை கல்லால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தும்செந்திலைகைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: