ஹைதராபாத், பிப்.4-
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவதென தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றும் திட்டங்கள் ஏதும்இடம்பெறவில்லை என பாஜக மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்பட்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், சந்திரபாபு நாயுடுவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது கூட்டணிக் கட்சிகளிடம் பாஜக கடைப்பிடித்து வரும் அணுகுமுறை குறித்த அதிருப்தியை இருவரும் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகப் போவதாக தகவ ல்கள் கசிந்தன. மற்றொருபுறம், தே.ஜ.கூட்டணியில் இருந்து விலகுவது போன்ற கடுமையான முடிவுகளை எடுத்துவிட வேண்டாம் என, பாஜக மூத்த தலைவர்களும், அமைச்சர்களுமான அருண்ஜெட்லியும், ராஜ்நாத்சிங்கும் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்பு கொண்டு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியில் தொடருவதா? வேண்டாமா? என விவாதிப்பதற்காக முதலமைச்சரும், தெலுங்கு தேசகட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில், அமராவதியில் ஆட்சி மன்றக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்தரி, பா.ஜ.க.வுடனான கூட்டணியி ் இருந்து விலகுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கூட்டணியில் இருந்தபடி தங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.