கோவை, பிப். 4-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாதாந்திர இலக்கிய சந்திப்பு கூட்டம் ஞாயிறன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சங்கர் கூட்டரங்கில் நடைபெற்றது.

கணுவாய் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாவல் அறிமுகம், கவியரங்கம், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மறைந்த பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஞாநியின் நினைவலைகள் என்கிற தலைப்பில் கோவை தீக்கதிர் பொறுப்பு ஆசிரியர் எம்.கண்ணன் உரையாற்றினார். தொடர்ந்து இர.முருகவேளின் செம்புலம் நாவல் குறித்து எம்.மகாலட்சுமியும், இளஞ்சேரலின் கட்சிதம் நாவல் குறித்து சூர்யா ஆகியோர் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினர். நூலசிரியர்கள் ஏற்புரையாற்றினர். இதழ்களில் வெளிவந்த கவிதைகள் குறித்து வைசாலி செல்வம், அ.சின்னசாமி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் உரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் தமுஎகசவின் மாவட்ட தலைவர் தங்கமுருகேசன், செயலாளர் மு.ஆனந்தன், பொருளாளர் தி.மணி மற்றும் கரீம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.