கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே   யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே அழகுபாவி என்ற இடத்தில் காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை காலை பத்தாகோட்டா கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவரை, யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மற்றும் முனிகிருஷ்ணன் ஆகியோரையும் காட்டு யானை தாக்கியது.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், ஒற்றை யானையை சாமல்பள்ளம் நோக்கி விரட்டி விட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் சின்னாறு பகுதிக்கு திரும்பிய ஒற்றை யானை, தேவர்குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரை மிதித்துக்கொன்றது. இதில் யானையின் தந்தத்தின் முனை உடைந்து விழுந்தது. அதை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு நாட்களில் அடுத்தடுத்த இருவர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: