அமராவதி:
பாஜக-வுடனான கூட்டணியை தெலுங்குதேசம் முறிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப, பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை விமர்சித்திருந்தார்.இன்று தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசுகையில், பாஜக உடனான கூட்டணியை மக்கள் விரும்பாத நிலைமை வரும் போது உறவை முறித்து கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இதனிடையே, பாஜக கூட்டணி தொடர்பாக அமராவதியில் நாளை நடைபெறும் தெலுங்கு தேச எம்.பி.க்கள் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: