நாகர்கோவில்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாநாட்டையொட்டி சனிக்கிழமை கண்டன்விளை மற்றும் கல்லுக்கூட்டத்திலிருந்து பேரணியும் திங்கள்நகரில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் என்.முருகேசன் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் டி.ஜெ.புஸ்பதாஸ் வரவேற்றார். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் உரையாற்றினர். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சிறப்புரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு பொருளாளர் ஆறுமுகம் பிள்ளை நன்றி கூறினார்.மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், எம்.அண்ணாதுரை, கே.தங்கமோகன், கே.மாதவன், என்.எஸ்.கண்ணன், என்.உஷா பாசி, எஸ்.ஆர்.சேகர், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.ரெஜீஷ்குமார் ஆகியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: