ராய்பூர்,

சத்தீஸ்கரில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

 சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் நகரின் கங்கர் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: