கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலிலிருந்து திருநங்கைகளால் தள்ளிவிடப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 2 பேரை ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் கீழே தள்ளியதாக சக பயணிகள் தகவல் அளித்துள்ளனர். இதில் ஆந்திராவை சேர்ந்த சத்தியநாராயணன் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த பாபு என்பவர் ஊத்தங்கரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.