ஜம்மு;
காஷ்மீர் மாணவர்கள் ஹரியானாவில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நடத்தப்பட வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் ஹரியானாவில் உள்ள மத்திய பல்கலைக்கழக்கதில் பயின்று வருகின்றனர் இந்நிலையில், அங்குள்ள மஹேந்திரகர் என்ற மாவடத்தில் இருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று தொழுகையை முடித்துக் கொண்டு அந்த மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

அப்போது, மசூதி அருகே அவர்களை எதிர்பார்த்து திரண்டிருந்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தின் காரணம் தெரியவில்லை. இதில் படுகாயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்நிலையில், காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் ஹரியானா அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி அந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநில காவல்துறை டிஜிபி உடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அங்குள்ள காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் டிஜிபி சேஷ்பால் வெய்ட் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: