புதுதில்லி:
ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார்மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனைத் தனியார் நிறுவனத்துக்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஏர் ஏசியா உள்ளிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏர் இந்தியா யாருக்கு விற்கப்படும் என்பது ஜூன் மாத இறுதியில் தெரியவரும் என்றும், ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: