கவுகாத்தி:
அசாமில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சனிக்கிழமையன்று தொடங்கியது. 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: