பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட்-டுரோபேஸ் நகரின் வடமேற்கில் இருந்து சுமார் 50 கி.மீ., தொலைவில் உள்ள கேர்கெஸ் ஏரிக்கரை பகுதியில் இன்று பறந்த ராணுவத்தை சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த 5 பேர் பலியாகினர். மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.