மோடி அரசாங்கத்தின் மத்திய பட்ஜெட் மக்களைத் திசைதிருப்பும் விதத்தி
லும், குழப்பும் விதத்திலும் கட்டமைக்கப்பட்டுள்ள நயவஞ்சகமான பட்ஜெட். இது தொழிலாளர் விரோத, மக்கள் விரோத பட்ஜெட்டாகும். நாட்டின் நலன்களுக்கும் எதிரானதாகும்.
இந்த பட்ஜெட், வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகை களை விரிவாக்கி இருக்கிறது. நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, 250 கோடி பரிவர்த்தனையுள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதாச்சாரத்தை 25 சதவீதம் குறைத்தி
ருக்கிறது. இதனால் பலன் அடையப் போவது சிறிய தொழில் நிறுவனங்கள் அல்ல.
மாறாக பெரும் கார்ப்பரேட்டுகள்தான். இவ்வாறு நயவஞ்சகமான வழியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமையை மேலும் ஏழாயிரம் கோடி ரூபாய்க்குக் குறைத்திருக்கிறது.
இப்படியாக மோடி தன் ஆட்சிக்காலம் முழுவதும் மேற்கொண்டுவந்த கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை களின் காரணமாக, நாட்டில் 1 சதவீதமாக இருக்கிற பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 73 சதவீதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும்கூட இந்த அரசு
தன்னை ஏழைகளுக்கான அரசு என்று கூறிக்கொண்டிருப்பது தொடர்கிறது.
மோடி அரசாங்கத்தின் இந்த மோசடி பட்ஜெட்டுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தினர் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுமாறு சிஐடியு அறைகூவி அழைக்கிறது.
சிஐடியு தலைவர்கள் டாக்டர் கே.ஹேமலதா,
தபன்சென் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து…

Leave a Reply

You must be logged in to post a comment.