மோடி அரசு, கார்ப்பரேட் ஆதரவு,ஏழைகள் விரோத மற்றும் நவீன
தாராளமயக் கொள்கைகளின் காரணமாக வேலைஇழப்புகள் மற்றும் மக்கள் தொகையினரில் பெரும்பான்மையோருக்கு வறுமையையே வழங்கியிருக்கிறது.

வேலையிழப்புகளால் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது மற்றும் ஜிஎஸ்டி வரி காரணமாக அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்கள்தான்.

கல்விக்கான ஒதுக்கீடு மொத்த செலவினங்களில் 2.1 சதவீதத்திலிருந்து 2.0 சதவீதமாகவும், அனைவருக்குமான கல்வித்திட்டத்திற்கான செலவினம் 47.9 சதவீதத்திலிருந்து 46.3 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. ‘ஏகலைவன் வித்யாலயா’ என்று கூறப்பட்டிருந்தாலும், கல்விக்கான செலவினம் அதிகரிக்காதபட்சத்திலும், இதற்கென்று தனியே எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படாத நிலையிலும் இந்த அரசு வெற்று விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. பெண் கல்விக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடும் 64.1 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.

இந்த அரசு பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொண்டபோதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. நிர்பயா நிதியம் தொடர்ந்து 500 கோடி ரூபாயாகவே இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்திற்கான ஒதுக்கீடும் 1655.17 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டு இதில் 3400 கோடி ரூபாய்தான் செலவு செய்யப்பட்டது. இதன் பொருள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதேயாகும்.

இறுதியாக, ‘நேர்மையான ஊதியம் பெறும் மத்திய தர வர்க்கத்தின்‘ சுமையைக் குறைத்திருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். கல்வி செஸ் வரியை ஒழித்துவிட்ட
தாகத் தம்பட்டம் அடித்தாலும் புதிதாக சமூகநல செஸ் வரி 10 சதவீதம் விதித்திருப்பதன் மூலம் முன்புவாங்கிய ஊதியத்தைவிட 8 சதவீதம் குறைவாகவே ஊழியர்கள் வாங்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். வருமான வரியில் சில கழிவுகளை செய்துகொள்ளலாம் என்று
கூறியுள்ளபோதிலும், நிகர வரிச் சுமை குறைவதற்கு வாய்ப்பில்லை என்றே இதுதொடர்பான வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பெண்களில் பெரும்பாலானவர்கள் முறைசாராத் துறைகளில் வேலையில் ஈடுபட்டி
ருப்பதால் இந்தச் சலுகையும் கூட அவர்களுக்கு எதுவும் பயனளித்திடப்போவதில்லை.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் உழைக்கும் வர்க்கக் குடும்பத்தினரின் சுமைகளை அதிகரித்திருக்கிறது. மேலும் சமூகநலத்திட்டங்களுக்காக அவர்கள் தனியார் நிறுவ
னங்களின் கதவுகளைத் தட்டவேண்டிய அவலநிலையையும் உருவாக்கியிருக்கிறது. இவை பெண்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அனைத்து மகளிர் அமைப்புகளையும் அறைகூவி அழைக்கிறது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள்
மாலினி பட்டாச்சார்யா, மரியம் தாவ்லே ஆகியோர்
விடுத்துள்ள அறிக்கையிலிருந்து..

Leave A Reply

%d bloggers like this: