மத்திய அமைச்சரின் “வேகமான பொருளாதார வளர்ச்சி’’ க்கு ஊனமுற்றோர் தேவையில்லை என்று நினைத்திருப்பதுபோல் தோன்றுகிறது. 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தின் ஷரத்துக்களை அமல்படுத்து
வதில் அரசாங்கம் அக்கறையற்று இருப்பதையே பட்ஜெட் பிரதிபலிக்கிறது.
ஊனமுற்றோருக்கான திட்டங்களை அமல்படுத்துவதற்காக பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஊனமுற்றோர் ரயில் பெட்டிகளில் ஏறுவதற்கு ஏற்றவகையில் ரயில்நிலையங்கள் மாற்றிய மைக்கப்படும் என்று கடந்தாண்டு பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் அது என்னாயிற்று என்றே தெரிவித்திடவில்லை. ஊனமுற்றோருக்கான மின்தூக்கிகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
அதே போன்று ரயில் நிலையங்களில் ஊனமுற்றோருக்கான கழிப்பிடங்கள் குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.ஊனமுற்றோருக்கு என்று புதிதாக எந்தத்திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் கடந்த பல ஆண்டுகளாக வெறும் 300 ரூபாய் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
நிதியமைச்சர் எண்ணற்ற இன்சூரன்ஸ் திட்டங்களை அறிவித்திருக்கிறார். எனினும், 2015இல் ஊனமுற்றோருக்காக அறிவிக்கப்பட்ட ஸ்வவ்ரம்பான் சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடவில்லை.
இதனால், இதனை அமல்படுத்துவதற்காக கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பிரிமியத் தொகை வாங்குவதையே நிறுத்திவிட்டது. மேலும் மன நலக் குறைபாட்டிற்கு (Mental Health) ஆளானவர்கள் குறித்து நிதியமைச்சர் எதுவுமே
குறிப்பிடவில்லை. 2017இல் மனநோயாளிகள் சுகாதாரப்பாதுகாப்பு சட்டம் (Mental Health Care Act) நிறைவேற்றப்பட்டிருப்பினும் இது தொடர்பாக எதுவும் கூறாமல் மவுனம் காத்திருக்கிறார்.
பல்வேறு துறைகள் ஊனமுற்றோர் குறித்து ஒதுக்கீடு கள் செய்தாலும் ஒரு தெளிவான பார்வையை இந்த அரசு ஏற்படுத்திடவில்லை. ஊனமுற்றோரின் பிரதான கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான  தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன்
வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து)
தொகுப்பு: ச.வீரமணி

Leave a Reply

You must be logged in to post a comment.