திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி, 25 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு, திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெட்டிங் அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தலைமையில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது. 50 ஆயிரத்து 400 கிலோ தலைமுடி 25 கோடி யே 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: