நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கன்னி யாகுமரி மாவட்ட மாநாடு
கடந்த மூன்று நாட்களாக குளச்சலில் நடைபெற்றது.பிரதிநிதிகள் மாநாட்டி ற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் மற்றும் சத்தியேந்திரன், மேரி ஸ்டெல்லாபாய் ஆகியோர் தலைமை வகித்தனர்.
வரவேற்புக்குழு தலைவர் ஏ.வி.பெல்லார்மின் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் துவக்கவுரையாற்றினார்.மாவட்ட செயலாளர் என்.முருகேசன் சமர்ப்பித்த ஸ்தாபன வேலையறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது வாழ்த்து ரை வழங்கினார். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டின் நிறைவில் மாவட்டச் செயலாளராக ஆர்.செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக என்.முருகேசன், ஆர்.லீமாறோஸ், எம்.அண்ணாதுரை, ஏ.வி.பெல்லார்மின், என்.எஸ்.கண்ணன், எம்.அன்பரசன், கே.தங்க மோகன், கே.மாதவன், என்.
உஷாபாஷி, எஸ்.ஆர்.சேகர், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், என்.ரெஜீஸ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் களாக பி.சிங்காரன், எஸ்.அந்தோணி, ஜி.சுப்பிர மணியம், விஜயமோகனன், சகாய ஆன்றணி, சைமன் சைலஸ், ஆர்.வில்சன், டி.வில்சன், மேரி ஸ்டெல்லா பாய், எம்.ரெகுபதி, எப்.எஸ்.ஏ.லியோ, சி.சசிகுமார், சிதம்பரகிருஷ்ணன், எப்.ஜாண், டி.ஜே.புஸ்பதாஸ், எம்.ஏ.சாந்தகுமார், டீ. ரெஜி, வி.அனந்தசேகர், வி.சந்திரகலா, பி.நடராஜன், மலைவிளை பாசி, எச்.ராஜதாஸ், பி.இந்திரா, ஆர்.ரவி, பி.விஸ்வாம்பரன், கே.தங்கமணி,எஸ்.டி.ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.