புதுக்கோடடை:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று இரவு சந்திரகிரகணப் பொங்கல்விழா நடைபெற்றது.2018, ஜனவரி 31 அன்ற நடைபெற்ற சந்திரகிரகணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும் இந்த வானியல் நிகழ்வை
சூப்பர் மூன், புளு மூன், சிவந்த நிலா என்று அழைக்கப்படுகிறது. இது 152 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அதிசய நிகழ்வாகும்.
ஒரு காலத்தில் கிரகண நிகழ்வுகள் நடைபெறும்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; பார்க்கக் கூடாது; உணவு சாப்பிடக்கூடாது. குளித்துவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்தது. நிலாவை பாம்பு விழுங்குவதால்தான் முழுநிலா திடீரென மறைந்து போகிறது என்று நம்பினார்கள். அறிவியல் வளர்ச்சியில் இவை கட்டுக்கதைகள் என்பதை மக்கள் புரிந்துகொண்டாலும் பெரும்பகுதியான மக்கள் இன்னும் பல்வேறு தவறான நம்பிக்கையில் உள்ளனர்.
சந்திரகிரகண நிகழ்வை மக்களிடையே அறிவியல் பூர்வமாக விளக்கிடவும், மக்கள் பார்ப்பதன் மூலமும் சாப்பிடுவதன் மூலமும் எந்தப் பாதிப்பும் இல்லையென்று விளக்கவும் அறிவியல் இயக்கத்தின் சார்பில் இப்பொங்கல் விழா சந்திரகிரணத்தின் போது நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் துணைத்தலைவர் க.உஷாநந்தினி தலைமை வகித்தார்.
கிளைச் செயலாளர் வித்யா வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் சந்திரகிரகண நிகழ்வுகளை விளக்கினார். சந்திரகிரகண நிகழ்வின்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டே இந்த அரிய நிகழ்வைக் பார்த்து ரசித்தார்கள்.
பின்னர், புதுக்கோட்டை புதுக்குளத்தின் கரையில் தொலைநோக்கி மூலமாக சந்திர
கிரகணம் நிகழ்வை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க மாவடடத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகிததார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், வானியலாளர் விவேகானந்தன், மாவட்டப் பொறுப்பாளர்கள் எம்.வீரமுத்து, பவுணம்மாள், வள்ளல், சதாசிவம் உள்ளிட்டோர் பஙகேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.