கோவை, பிப்.1-
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வார்டு மறுவரையறை ஆணையம் சார்பில் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வார்டு மறுவரையறை ஆணைய தலைவர் மாலிக்பெரோஸ்கான் தலைமை தங்கினார். இதில் மாநில தேர்தல் செயலாளர் ராஜசேகர், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிசாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடுமற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் வார்டு மறுவரையறை குறித்து வந்த மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கருத்துகளை கேட்டு பரிசீலனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்களான நகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கா.பாஸ்கரன், பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் த.சு.ராஜசேகர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமுர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிங்கை நகர செயலாளர் வி. தெய்வேந்திரன், பீளமேடு நகர செயலாளர் பாண்டியன், வடக்கு நகர செயலாளர் என்.ஆர்.முருகேசன், என்.செல்வராஜ்மற்றும் திமுக, சிபிஐ, உள்ளிட்ட அரசியல் கட்சி சேர்ந்த நிர்வாகிள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: