உடுமலை, பிப்.1-
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி உடுமலையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்தும். அதனை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உடுமலை சின்னவீரம்பட்டி கிளையின் சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னவீரம்பட்டி பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாவேந்தன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், தமுஎகச நிர்வாகி தோழன்ராஜா, லால், துரையரசன். மாதர் சங்கத்தின் மாலினி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான வாலிபர்கள் கலந்து கொண்டு மக்கள் விரோத நடவடிக்கையில் செயல்பட்டு வரும் தமிழக அரசை கண்டித்து முழங்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: