திருப்பூர், பிப்.1-
பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் சார்பில் 3 ஆவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வகையான தொழிலாளார்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2 ஆவது ஊதிய குழுவில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும். செல்போன் டவர் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வியாழனன்று பிஎஸ்என்எல் அனைத்து சங்கத்தின் சார்பில் மூன்றாவது நாளாக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அதிகாரிகள் சங்க கிளை தலைவர் சந்திரசேகர், ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை பொது மேலாளர் ராஜகோபால் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அதிகாரி சங்ககளின் நிர்வாகிகள், பழனிவேல்சாமி, டி,கேசவன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் காந்தி, ஓய்வு பொற்றோர் சங்க தலைவர் அர்சுணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்து கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளைத் தலைவர் சசிதரன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, உதவி செயலாளர் ஆர்.ஆர்.மணி. தலைவர் எம்.நிசார் அகமது, வட்ட கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன், எஸ்என்இஏ செயலாளர் ஆர்.அன்பரசு, என்எப்டிஇ. எஸ்.ஏ.ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: