திருப்பூர், பிப்.1-
மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான யோகா போட்டியில் திருப்பூர் மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் – விமலா தம்பதியினரின் மூத்த மகள் வைஷ்ணவி, இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் கடந்த ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மலேசியா நாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இந்தபோட்டிகளில் இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், இப்போட்டியில் பங்கேற்ற மாணவி வைஷ்ணவி, தங்கம் உள்ளிட்ட மூன்று பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக, கடந்த வருடம் ஜூன் மாதம் சீனாவில் நடந்த யோகா போட்டிகளிள் கலந்து கொண்ட இவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அரசின் பாராமுகம் இதற்கிடையே, வைஷ்ணவியின் யோகா ஆசிரியர் ராம் கூறுகையில்: மாணவி வைஷ்ணவி பல நாடுகளிள் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பிடிந்து நமது நாட்டிற்கு பெறுமை தேடி தந்துள்ளார், அண்மையில் சர்வதேச அளவில் மலேசியா நாட்டில் நடந்த யோகா போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார், ஆனால்,இதுவரையில் அரசின் சார்பில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் பாரமுகமாக இருப்பது வருத்தமளிக்கிறது, எனவே, தமிழக அரசு போதிய உதவிகளை செய்து ஊக்கப்படுத்தினால் வைஷ்ணவி இன்னும் பல பரிசுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: