வேலூர்,

வேலூரில் செவ்வாயன்று பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும்,  கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், வேலூர் மாவட்டம் ஓட்டேரி – ஆரணி  சாலையில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2000 பேர் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள், போக்குவரத்து பாதிப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் வேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.