ஈரோடு, ஜன.31-
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் என்.விஜயகுமார், ஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். வாலிபர் சங்க நிர்வாகிகள் வி.ஏ.விஸ்வநாதன், பி.மணிகண்டன், அன்பழகன் உட்பட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: