சேலம், ஜன.31-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று சேலம் சின்னேரி வயல் பகுதியில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். இதில் தமுஎகச மாநில துணை செயலாளர் அ.லட்சுமணன் கருத்துரை வழங்கினார். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்,பிரவின்குமார், பொருளாளர் வெங்கடேஷ், தமுஎகச மாவட்ட செயலாளர் நிறைமதி, சேக் அப்துல்லா, செ.ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: