இராசிபுரம், ஜன. 31-
இராசிபுரம் நகராட்சி நிர்வாகம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசிபுரம் நகராட்சியில் மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியினை திரும்ப பெற வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குண்டும், குழியுமான சாலைகளையும், தெருக்களையும் சீரமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்திட வேண்டும், நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்பு புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் சி.சண்முகம் தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, பிரதேச குழு செயலாளர் ஜீ.செல்வராஜ், எம்.ஜி.ராஜகோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.நடேசன், பி.ராணி, பி.மாதேஸ்வரன், எஸ்.ராமலிங்கம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.