விழுப்புரம்,

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் போலி ஆணை மூலம் பணியில் சேர்ந்த 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தமிழக அரசு போக்குவரத்துத்துறை துணை இயக்குனர் பிரபாகரன்  செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50-க்கும் மேற்பட்டோர் போலி ஆணை மூலம் பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் போலி ஆணை மூலம் பணியில் சேர்ந்த துணை மேலாளர் குமார், இளநிலை உதவியாளர் கார்த்திகேயன் மட்டும் நடத்துனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடத்துனர்கள் 3 பேரும் தலா ரூ.3.5 லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலம் ஆகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply

You must be logged in to post a comment.