புதுதில்லி;
நாட்டின் தலைநகரான தில்லியில் 8 மாத பெண் குழந்தையை, 28 வயது உறவுக்கார பேர்வழி ஒருவரே வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தில்லியின் சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிகளுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் சக குடும்பத்தாரிடம் குழந்தையை விட்டுச் செல்வார்கள்.

சம்பவத்தன்றும் அதேபோல 8 மாத குழந்தை உட்பட 2 பெண் குழந்தைகளை உறவுக்கார பெண் ஒருவரிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்த உறவுக்காரண பெண்ணும் தனது, 28 வயது மகனிடம் குழந்தையை விட்டுவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மாலையில், உறவுக்காரப் பெண்மணி வேலையில் இருந்து திரும்பி குழந்தையை பார்த்தபோது, அதன் பிறப்புறுப்பில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வடிந்து கொண்டு இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோத்துவிட்டு, பாலியல் வல்லுறவுக் கொடுமை காரணமாக, அதிகப்படியாக ரத்தம் வெளியேறியது மற்றும் வலியால் குழந்தை மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக கூறி ஐசியூவில் சிகிச்சைக்கு சேர்த்ததுடன், அறுவைச் சிகிச்சையும் சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலை உள்ளதை கூறியுள்ளனர். 8 மாதக் குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் அறிந்ததும், குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினரும், மருத்துவமனைக்கு சென்றதுடன், குழந்தைக்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
அதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, அந்த குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடிபோதையில், குழந்தையை வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியதை அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைதான நபருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று குழந்தையின் நிலைமையை அறிய மருத்துவமனைக்கு சென்ற தில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், குழந்தைக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த காயங்கள் கொடூரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குழந்தை தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.