சேலம், ஜன. 30-
சேலத்தில் வெல்டிங் கடையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சேலம் மாநகரம் இரத்தனசாமிபுரம் பகுதியில் நீதிராஜன் என்பவர் வெல்டிங் மற்றும் கண்ணாடி கட்டிங் தொழில் செய்து வருகிறார். செவ்வாயன்று அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரை கடையின் ஊழியர் ஒருவர் நகர்த்த முயன்றார். அப்போது, திடீரென சிலிண்டர் வெடித்து சுமார் 50 அடி தூரம் பாய்ந்து சென்றது. இந்த வெடி விபத்தில் கடை ஊழியர் உட்பட யாரும் எவ்வித காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வெடித்த சிலிண்டரை கைப்பற்றி எரிவாயுவை வெளியேற்றினர். குடியிருப்பு பகுதியின் மத்தியில் ஏற்பட்ட இந்த சிலிண்டர் வெடி விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: