சேலம், ஜன.30-
தேசப்பிதா காந்தியடிகள் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜனவரி 30ம் தேதியையொட்டி மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பரமேஷ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சங்க மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி, சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம், குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், எ.கோவிந்தன், மாதர் சங்க நிர்வாகிகள் கே.ராஜாத்தி, ரேவதி, ராஜேஸ்வரி, கவிதா உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

கோவை:
கோவை காந்திபார்க் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு ஆட்டோசங்க பொதுசெயலாளர் பி.கே.சுகுமாறன், மருத்துவர் லெனின் பிரபு, முனைவர் காமராஜ், வழக்கறிஞர் என்.ராமர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும்ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.