தாராபுரம், ஜன.30 –
தாராபுரம் அமராவதி ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்திவந்த லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அமராவதி ஆற்றுப்படுகையில் இருந்து லாரி மூலம் மணல் கடத்தி வருவதாக தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சுவாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் வெங்கடலட்சுமி, சித்தராவுத்தன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பழைய ஹவுசிங் யூனிட் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது மணல் இருந்தது. ஆனால், இதற்கான உரிய அனுமதி சான்று இல்லை. இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் சிறுகிணறு ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து அமராவதி ஆற்றுப்படுகையில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி உரிமையாளரும், ஒட்டுநருமான சுரேஷ் (45) என்பவரை கைது செய்தனர். மேலும், லாரி பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: