திருப்பூர், ஜன. 30-
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் மாதர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெறக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாயன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர். மைதிலி தலைமை வகித்தார், சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கே. காமராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.

மாதர் சங்க மாநில துணை தலைவர் ஜி, சாவித்திரி, மாவட்ட செயலாளர் எஸ்.பவித்ரா தேவி, மாவட்ட பொருளாளர் ஏ.சகிலா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மணிகண்டன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.விமல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும், இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வசந்தி, லட்சுமி, எஸ்.பானுமதி, இ.வளர்மதி, கே.சரஸ்வதி, பி.செல்வி, இ.அங்குலட்சுமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.