கோவை, ஜன. 30-
பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பபெற வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கோவை துடியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளை ஒன்றியக்குழுவின் சார்பில் துடியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ந.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், ஒன்றிய செயலாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபக் சந்திரகாந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.