ஈரோடு, ஜன.30-
பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஸ்ரீ முருகன் தலைமை வகித்தார். மாணவர் சங்கத்தின் மாநிலகுழு உறுப்பினர் என்.விஜயகுமார், கௌதம், வாலிபர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், மணிகண்டன், விஸ்வநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆவேச முழக்கமிட்டனர்.

சேலம்:
சேலம் இருபாலர் அரசு கலை கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் துணை தலைவர் நவின், விஷ்ணுவரதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு, சட்டம், மருத்துவம், பொறியியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். பேருந்து கட்டண உயர்விற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள், மாணவர் சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: