புவனேஸ்வர்;
போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து, தேர்தலில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோகேஷ் குமார் சிங்கின் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது..ஒடிஷாவில் 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது சுந்தர்கார் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் ஜோகேஷ் சிங் வெற்றி பெற்றார். ஆனால் இவர் போலிச் சாதிச்சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று ஜோகேஷ் சிங்கின் எம்.எல்.ஏ. பதவியை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: