புதுதில்லி;
எந்த படத்தை பார்க்க வேண்டும்; எதைப் பார்க்கக் கூடாது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழ்பெற்ற நடிகை நந்திதாதாஸ் கூறியுள்ளார்.கன்னத்தில் முத்தமிட்டால், அழகி போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். இந்தியில் நிறைய படங்களிலும் நடித்திருக்கும் நந்திதா, தற்போது இயக்குநராகவும் மாறியிருக்கிறார். சாதத் ஹசன மன்ட்டே என்ற எழுத்தாளரின் கதையை திரைப்படமாக்குகிறார்.

இந்நிலையில், நந்திதா தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
திரைப்படங்களை தணிக்கை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஒரு சிலர் கொண்ட அமைப்பாகவே தணிக்கை குழு உருவாகி இருக்கிறது. கலாச்சாரத்தை காக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களால் ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது. தணிக்கை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தணிக்கை குழுவின் மொத்த அமைப்புமே தவறானது என்று நான் கருதுகிறேன்.விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் அமர்ந்து நாட்டில் உள்ளவர்கள், என்ன பார்க்க வேண்டும், என்ன பார்க்கக் கூடாது என்பதை எப்படி முடிவு செய்யலாம்? அப்படிப்பட்டவர்கள் மக்களை தவறாக கணக்குப்போடுகிறார்கள். இதைத் தான் பார்க்க வேண்டும். இதை பார்க்கக்கூடாது என்று அந்த மக்களை சிறுமைப்படுத்துகிறார்கள்.
இவ்வாறு நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.