தேசப்பிதா மகாத்மா காந்தியை இந்துத்துவ மதவெறியர் நாதுராம் கோட்சே சுட்டுக் கொலை செய்த ஜனவரி 30 ஆம் தேதியை ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மதநல்லிணக்கம், பயங்கரவாத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்கும் தினமாக கடைப்பிடிக்க அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்களில் தொழுநோய் இல்லா இந்தியாவை உருவாக்க அலுவலர்கள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இந்துத்துவ வெறியனால் தேசப்பிதா படுகொலை செய்யப்பட்டார் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதற்கும், மறக்கச் செய்வதற்கும் ஏதுவாக, மத்திய மதவெறி ஆட்சியாளர்கள் 2015இல் காந்தி நினைவு நாளை முதலில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தனர். இப்போது தொழுநோய் இல்லாத இந்தியா என்று அறிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு விதமாக திசை திருப்பி, காந்தியடிகள் உயிர்த் தியாகத்தின் வரலாற்று உண்மையை இருட்டடிப்புச் செய்யவும், அதில் இந்துத்துவ மதவெறியர்களின் இரத்தக் கறை படிந்த வரலாற்றை மூடி மறைக்கவும் மத்திய ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்களது சகிப்புத்தன்மையற்ற, மதவெறியின் கொடிய வரலாற்றை மக்கள் மனதில் நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்கு உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமையாகும்.

வே.தூயவன்

Leave A Reply

%d bloggers like this: