விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மயானம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் நீண்ட காலமாக மயானம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்த மயானத்தை மாவட்ட நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆவுடை ஆச்சி என்ற மூதாட்டி உயிரிழந்ததையடுத்து மயானத்தில் தகனம் செய்ய அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர். இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போராட்டம் நடத்த முயன்றனர். இவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இழுத்து சென்று கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடல் வேறு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் காவல்துறையினரின் இந்த போக்கிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: