சென்னை: தமிழ்த் திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கைச் சொற்கள் இடம்பெறாதது குறித்து விளக்கம் கேட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துக்குப் பொதுசுகாதார இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கைச் சொற்களைக் காட்ட வேண்டும். புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின்படி இவ்வாறு எச்சரிக்கைச் சொற்கள் இல்லாமல் படம் வெளியிட்டால் முதன்முறையாக 2ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் விதிகளை மீறினால் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் ஸ்கெட்ச், மெர்சல், இமைக்கா நொடிகள், சென்னையில் ஒருநாள் 2, வடசென்னை, வேலையில்லாப் பட்டதாரி, அருவி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட 14திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கைச் சொற்கள் இடம்பெறாதது குறித்து விளக்கம் கேட்டுத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துக்குப் பொதுசுகாதார இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.